இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - II
வேதங்களில் இறைச்சி உணவுக்கான சான்றுகள்
இந்துக்களின் மிகப் புனித நூலாக முன்வைக்கப் படும் ரிக் வேதம் மேய்ச்சல் கால ஆரிய சமூகத்தையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக்காட்டுகிறது. எனவே அவர்களது வாழ்வில் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை ஆக இருந்தன. பசுவைக் குறிக்கும் காவ் என்னும் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக்கணக்கான முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பசுக்களே ஆரம்பகால ரிக்வேத ஆரியர்களின் முக்கிய உடைமையாக இருந்தன. பசுவின் கன்றுகள் தாயிடம் ஓடிவரும் போது எழுப்பும் சப்தமே அவர்களின் காதுகளுக்கு மிக இனிமையானதாக இருந்தது.
ஆரிய இனக்குழுக்களின் தலைவர்கள் கோபதி என்று அழைக்கப்பட்டனர். ஆரிய சமூகத்திற்குப் பொதுவானதாக இருந்த கால்நடைகள் அடைக்கப்பட்ட இடம் கோத்ர என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தச் சொல் இரத்த உறவு உடைய உறவினர்களைக் குறிப்பதாக மாற்றம் பெற்றது. ஆரியர்கள் தங்களுக்குள்ளும் ஆரியர் அல்லாதவர்களுடனும் நடத்திய சண்டைகள் கவிஷ்தி அல்லது கால்நடை கவர்தலுக்காக நடத்தப்பட்ட மோதல் என்று கூறப்பட்டன.
இவ்வாறு பசுக்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானதாக இருந்த போதிலும், அதனைக் கொல்வதும் அதன் மாமிசத்தை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை. பசுக்கள் மட்டுமின்றி இதர கால்நடைகளைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.
எனவே, வேத காலத்தில் இறைச்சி
உணவு பொதுவாக வழக்கத்தில் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அது வெறுக்கவோ
ஒதுக்கவோ படவில்லை என்பது உறுதியாகும்.
வேதங்களில் இறைச்சி உணவுக்கான சான்றுகள்
இந்துக்களின் மிகப் புனித நூலாக முன்வைக்கப் படும் ரிக் வேதம் மேய்ச்சல் கால ஆரிய சமூகத்தையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக்காட்டுகிறது. எனவே அவர்களது வாழ்வில் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை ஆக இருந்தன. பசுவைக் குறிக்கும் காவ் என்னும் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக்கணக்கான முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பசுக்களே ஆரம்பகால ரிக்வேத ஆரியர்களின் முக்கிய உடைமையாக இருந்தன. பசுவின் கன்றுகள் தாயிடம் ஓடிவரும் போது எழுப்பும் சப்தமே அவர்களின் காதுகளுக்கு மிக இனிமையானதாக இருந்தது.
ஆரிய இனக்குழுக்களின் தலைவர்கள் கோபதி என்று அழைக்கப்பட்டனர். ஆரிய சமூகத்திற்குப் பொதுவானதாக இருந்த கால்நடைகள் அடைக்கப்பட்ட இடம் கோத்ர என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தச் சொல் இரத்த உறவு உடைய உறவினர்களைக் குறிப்பதாக மாற்றம் பெற்றது. ஆரியர்கள் தங்களுக்குள்ளும் ஆரியர் அல்லாதவர்களுடனும் நடத்திய சண்டைகள் கவிஷ்தி அல்லது கால்நடை கவர்தலுக்காக நடத்தப்பட்ட மோதல் என்று கூறப்பட்டன.
இவ்வாறு பசுக்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானதாக இருந்த போதிலும், அதனைக் கொல்வதும் அதன் மாமிசத்தை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை. பசுக்கள் மட்டுமின்றி இதர கால்நடைகளைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.
ரிக் வேதத்தில்
ஆடு, எருது மற்றும் குதிரை உள்ளிட்ட விலங்குகள் வேதக் கடவுளர்களுக்கு உணவாகப் படைக்கப்பட்டது
பற்றி ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன.
ஆரியர்களால்
பெரிதும் போற்றப்பட்ட கடவுளான இந்திரன் காளையின் இறைச்சியை மிகவும் விரும்பி உண்டான்
என்பதை ரிக் வேதம் பல முறை குறிப்பிடுகிறது (ரிக்வேதம் 10.86.13, 14). இந்திரனுக்காக
நூறு எருமைகளை விஷ்ணு சமைத்துக் கொடுத்ததாக ஒரு ரிக்வேதப்பாடல் கூறுகிறது (ரிக்வேதம்
6.17.11) குதிரைகள், காளைகள், மலட்டுப் பசுக்கள் மற்றும் ஆடுகள் அக்கினியின் உணவாக
இருந்தன என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் பலியிடுதல் சடங்குகளில் பலியாகத்
தரப்பட்டன. இவ்வாறு பலியிடப்பட்ட விலங்குகளை உண்ணுவது பழக்கமான ஒன்றாக இருந்தது என்பதைப்
பிற்கால ஆதாரங்கள் நிரூபித்துள்ளன. மக்கள் தாம் விரும்பும் உணவை, மிகச் சிறந்ததாகக்
கருதுவதையே தனது கடவுளர்களுக்குப் படைப்பார்கள். விலக்கப்பட்ட உணவைத் தனது கடவுளர்களுக்குப்
படைக்க மாட்டார்கள் என்பதால் படையல் பொருட்கள் நிச்சயமாக அவர்களது விருப்பத்தைப் பிரதிபலிப்பவையே
ஆகும்.
No comments:
Post a Comment