இறைச்சி உணவும்
இந்து மத இலக்கியங்களும் - I
இறைச்சி உணவைக்
குறிப்பாக மாட்டு இறைச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று இந்துத்வ வெறியர்கள் சில காலமாகக்
கூப்பாடு போட்டு வருகிறார்கள். மும்பாய் உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக ஆட்சியாளர்கள்
இதனைச் சட்டவழியில் நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளனர். மாட்டு இறைச்சி என்பது இந்துக்கள்
எப்போதுமே உட்கொள்ளாத மற்றும் ஒதுக்கப்பட்ட ஒன்றாகும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது
அவர்கள் நோக்கம் ஆகும்.
இந்துக்கள்
என்று சொல்லிக் கொள்பவர்களில் மிகப் பெரும்பான்மை ஆனவர்கள் வேதங்கள் உள்ளிட்ட இந்து
மதவியல் இலக்கியங்களைப் படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே இத்தகைய
பிதற்றல்களை இவர்கள் இத்தனை நம்பிக்கையுடன் முன்வைப்பதற்குக் காரணமாக இருக்கிறது.
இதனைத் தாண்டி,
இந்து மதவியல் இலக்கியங்களைப் படித்தால் வேத காலம் முதல் இறைச்சி உணவு உட்கொள்வது மிகச்
சாதாரணமாக தினசரி நிகழ்வு ஆக இருந்தது என்பது மிகத் தெளிவாகும். இந்துக்களின் புனித
நூல்களாகிய வேதங்கள், அதனை அடுத்து வந்த பிராமணங்கள், தத்துவப் பேழைகள் என்பதாக முன்னிறுத்தப்
படும் உபநிடதங்கள் ஆகிய அனைத்தும் இதற்குப் போதும் என்று சொல்லும் அளவுக்குத் தேவையான
சான்றுகளை முன்வைக்கின்றன.
ஆகவே இறைச்சி
உணவை எதிர்க்கும் இந்துத்துவ வெறியர்களை அறிவுசார் அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டும்
என்றால், இதனை நாம் மேலே சொன்னது போல வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே
எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது வெறும் நேர விரயமாக மட்டுமே இருக்க முடியும்.
No comments:
Post a Comment