சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சமஸ்கிருத உத்சவம் 2012 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. பேராசிரியர் சாலமன் பாப்பையா மற்றும் ஏராளமான சமஸ்கிருத பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பாரதியார் நெல்லையிலேயே இருந்து விடாமல் காசிக்கும் சென்றதால் தான் அவருக்கு தேசியப் பார்வை கிடைத்தது, மேலும் சமஸ்கிருத மொழியே அவருக்கு தேசியப் பார்வை காட்டியது என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி அவர்கள் பேசியுள்ளதை ஆகஸ்டு 20 அன்று தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டிருந்தது. சமஸ்கிருத மொழியின் சிறப்பைக் கூறுவதாகச் சொல்லிக் கொண்டு பாரதியை சிறுமைப்படுத்தியுள்ளது இது.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று மானுடத்தைப் போற்றிய பாரதி காசிக்குப் போகமலிருந்தாலும் பாரதிக்கு நிச்சயம் தேசிய உணர்வு கிடைத்திருக்கும். பிஜித் தீவுக்
குப் போகாமல் தான் அங்கு தவித்த தமிழர்களுக்காக அவர் கண்ணீர் சிந்தினார். அவருக்கு சர்வதேசியப் பார்வை இருந்தது என்பதே இதற்குக் காரணம்.
காசிக்குப் போனதால் அவரது வாழ்வில் நடைபெற்ற நல்ல விசயம் ஒன்று உண்டென்றால் அவர் தனது பூணுலை அறுத்து எறிந்தது தான். பாரதியைப் பற்றித் தப்புத்தப்பாகப் பேசும் இது போன்றவர்கள் அதனைப் பற்றிப் பேசத் தயாராக இருக்க மாட்டார்கள்.
சமஸ்கிருத மொழியை வளர்ப்பதும் பரப்புவதும் அவர்களது சொந்த விசயம், அதில் யாரும் தலையிடப் போவது இல்லை. ஆனால் சமஸ்கிருதத்தைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு யுககவிஞனாகிய பாரதியை இவர்கள் கொச்சைப்படுத்துவக் காண நெஞ்சு பொறுக்குதில்லையே.